உன்னால் பிடித்தது

உனக்கு மல்லிப்பூ பிடிக்கும் என்றாய்
எனக்கும் பிடித்தது
உனக்கு லட்டு பிடிக்கும் என்றாய்
எனக்கும் பிடித்தது
உனக்கு மயில் பிடிக்கும் என்றாய்
எனக்கும் பிடித்தது
உனக்கு கடல் பிடிக்கும் என்றாய்
எனக்கும் பிடித்தது
உனக்கு வயல் பிடிக்கும் என்றாய்
எனக்கும் பிடித்தது
உனக்கு கவிதை பிடிக்கும் என்றாய்
எனக்கும் பிடித்தது
உனக்கு ஜோதிகா பிடிக்கும் என்றாய்
எனக்கும் பிடித்தது
உனக்கு அஜித் பிடிக்கும் என்றாய்
எனக்கும் பிடித்தது
இறுதியில்
உனக்கு வேறொருவனை பிடிக்கும் என்றாய்
எனக்கும் பிடித்தது பைத்தியம் !

எழுதியவர் : சூரியன் வேதா (11-Jul-15, 2:19 pm)
Tanglish : unnaal pidiththathu
பார்வை : 210

மேலே