இனியாவது வாழ்வோம் - காதலி

குழந்தை குறும்புகள் எல்லாம்
குட்டையாய் போனது
குனிந்து அவள் முத்தமிடுகையில்

படித்த படிப்பு எல்லாம்
பங்குனி வெயிலாய் போனது
பத்தினி அவள் பல்லால் கடிக்கையில்

கல்லூரி காலம் எல்லாம்
கானல் நீராய் போனது
கன்னி பொண்ணு அவள் கன்னத்தில் முத்தமிடுகையில்

பருவ வாழ்க்கை எல்லாம்
பக்குவம் வந்து விட்டது
பல்லாங்குழி விளையாடியவள் வெக்கபடும் போது

மணவாழ்க்கை எல்லாம்
மகிழ்ச்சியாய் கழிகிறது
மனைவி அவள் மகனை ஈன்ற பொழுது

ஐந்து காலகட்டம் கடந்து விட்டேன்
ஐந்து விரல்கள் போல்
ஐந்தும் விதவிதமாய்

ஆறாம் அறிவிற்கு
ஆண்டவன் கொடுத்தான்
அந்த குழந்தையின் நிலையே.............

குழந்தை குறும்புகள் எல்லாம்
குட்டையாய் போனது
குனிந்து அவள் கொடுத்த முத்தம் முதியோர் இல்லத்தில்...............இன்றும் அதே மகிழ்ச்சியோடு .

இயந்திர வாழ்க்கை இனிதே கழிந்தது
இனியாவது வாழ்வோம்
இறுதி ஊர்வலத்தில் ...............................

எழுதியவர் : மடந்தை ஜெபக்குமார் (11-Jul-15, 7:47 pm)
பார்வை : 142

மேலே