என்னில் நீயே

அகராதி அதனை முழுதாய்
கடைந்தெடுத்த பின்னும்
கிட்டவில்லை சொற்கள்
என் அன்பை சொல்லிட!
தூக்க கலக்கத்திலும்,
அசரீரியென ஒலித்திடும்
அவன் குரல் உணர்த்திடும்,
நான் கொண்ட காதலதை!
முன் அறியாத வெட்கங்கள்
அழையாது வந்து குடியேற,
அணங்கிவள் கொண்ட மையல்
அகிலமே உணர்ந்திடும்!
அறைகளென பிரிந்த இதயத்தை
மொத்தமாய் நீ குத்தகை எடுக்க,
உயிரதும் உணர்ந்திடும்
உதிரத்தில் நீ கலந்த கதை!