கள்ள நோட்டு
பேங்க் மேனேஜர் அறைக்குள் நுழைந்த இன்ஸ்பெக்டர் “ தொந்தரவுக்கு மன்னிக்கவும், உங்க பேங்கில் கள்ள பணம் நடமாட்டம் இருக்கிறதாக புகார், அதுவும் உங்க ஊழியரே உடந்தைனு தகவல்? ஸோ பேங்கை சோதனை பண்னனும்”
“தவறான தகவல்,இங்க யாரும் அப்படி கிடையாது , இருந்தாலும் புகார் வந்ததுக்கு அப்பறம் விசாரனைக்கு ஒத்துழைப்பு தரவேண்டியது எங்க கடமை, நீங்க தராளமாக சோதனை செய்யலாம்”
சோதனை செய்த போது ஒரு கேஷ் கவுண்டரில் கள்ள நோட்டு நிறையாக மாட்டியது,அது காலையில் தான் வடமாநிலத்தில்யிருந்து மாறுதால் ஆகி வந்த கேஷியரின் கவுண்டர். தனக்கு ஒன்றும் தெரியாது என்று சாதித்தான்.
மேனேஜர் ஆத்திரத்துடன் “இன்ஸ்பெக்டர்!! இவன இப்படியெல்லாம் கேட்ட உண்மைய சொல்லமாட்டான், லாக்கப் கொண்டுபோயி உங்க முறைபடி விசாரிங்க அப்பதான் உண்மைய சொல்லுவான் ,இன்னைக்குதான் சேர்ந்தான் அதுக்குள்ள எவ்வளவு பெரிய காரியம் பண்ணியிருக்கான்”
“நீங்க சொல்றதும் சரிதான் !!! ஒரு பார்மல் கம்பளையிண்ட் குடுத்துருங்க, இந்த ரசீதில் மொத்த பணத்திற்கு வரிசைவாரியாக கணக்கு எழுதி கையெழுத்து போட்டு குடுத்துருங்க, மொத்தம் ஒரு கோடி, விசாரனை முடித்த பிறகு கோட்டில் ஒப்படைத்து விடுவோம்,ரசீதை கோட்டில் காட்டி நீங்க பணத்தை வாங்கிலாம்”
“ ரொம்ப தாங்க்ஸ் இன்ஸ்பெக்டர்,”
போலிஸ் வேன் கிளம்பியதும் அறைக்கு திரும்பிய மேனேஜர் தன் செல்போனை எடுத்து “பாட்னர், பிளான் சக்ஷஸ் !!! புது கேஷியர் வராத பயன்படுத்தி ஐந்து லட்சம் கள்ள நோட்டை மாத்தியாச்சி,புது ஆளுங்கதால நோட்டை செக் பண்ணம வாங்கி மாட்டிகிட்டான், நீயும் போலீஸ்க்கு அனனீமஸ் கால் பண்ணாதுல அவங்களும் கரெக்ட் டைமுக்கு வாந்துட்டங்க”
அறை வாசலில் நிழல் அடியாது, ஒரு இளைஞன் உள்ளே வந்து “ சார்!! நான் இன்னைக்கு ஜாயின் பண்ண வேண்டியா கேஷியார், வரும்போது பெட்டி தொலைந்து போச்சி, கம்பளையிண்ட் குடுத்துட்டு வர லேட் ஆயிடுச்சி”
மேனேஜர்க்கு குழப்பமாகயிருந்தது, அப்பிடினா காலையில் வேலைக்கு சேர்ந்து,இப்ப போலீஸ் பிடிச்சிட்டு போன ஆள் யாரு?
தன் கையில்யிருந்த ரசீதை பார்த்தார் ,அதில் ஹோட்டல் சரவணபவன் சீல் இருந்தது.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
