ஒரு கணவன் இரங்கல்
பொல்லாத நோயோன்று
சொல்லாமல் வந்ததினால்
என்னை பார்க்காமல் இருந்தயோ,
பரவும் என்று தள்ளியே நின்றாயோ!
பொல்லாத நோய் ஒன்றும்
என்னை கொல்லவில்லை!
பெண்ணே,
வந்தும் தள்ளியே நின்றதிதனால்
என் நெஞ்சம் கதறுதடி!
யாருக்கும் இந்நிலமை
வந்துவிடக் கூடாது!! - பெண்ணே
எரிந்தாலும் நிழல் என்றும்
இறந்து விட முடியாது!
அன்புக்கு ஈடாக
எம்மருந்தும் இல்லையே! -கண்ணே
நீ எனை அரவணைத்தால்
எந்நோயும் பறந்துவிடக் கூடுமே!!
மாதம் ஒருமுறை நீ வந்து பார்க்க
நானென்ன உன் உறவினரா!??
மனைவியே, நான் இறந்தாலும்
உன் கணவன் என்பதை நீ
அப்பொழுது அறிவியா!?
கண் எதிரே என் குழந்தை
தவழ்கின்ற நேரத்திலே - நான்
தொட வந்தேன் நீ எடுத்தாய்
பரவும் ஒரு கணத்திலே!!
அச்சமின்றி கேட்கிறேன்
உன் காலிலே விழவா??
என் மேல் ஒரு துளி கருணையாவது
பெண்ணே காட்ட நீ வா!!
இன்றைக்கோ நாளைக்கோ
நான் இறந்து விட நேரிடும்! கண்ணே
கருணை காட்டியாவது என் குழந்தை
தொட வையடி உனக்கு புன்னியம்!!
இனிநான் வாழ்ந்தும் பயனில்லை,
தங்கமே,குழந்தையை நீ நல்வளர்ப்பாய் உனை விட்டு
நெடுந்தூரம் போகிறேன்!!!!
♥♥♥
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
