என் தலையெழுத்தும் மறைந்து போனதே
![](https://eluthu.com/images/loading.gif)
எல்லோருமே எனை தட்டிக்கொடுத்து
வேலை வாங்கிக் கொள்கின்றார்கள்
நானோ..!
அவர்களுக்காக உழைத்து உழைத்தே
தேய்ந்து போகின்றேன்....
உங்களிடம் அடி வாங்கி வாங்கி
எனக்கும் மறித்துப்போனது
என் தலையெழுத்தும் மறைந்து போனது....
எனை படைத்தவர்கள் விற்றுவிட்டதால் தான்
இந்த படித்தவர்கள் எனை பாடாய் படுத்துகின்றார்கள்
ஹிட்லரைப் போல...
எனை அடித்து துன்புறுத்த
பயிற்சி வகுப்புகள் கூட நடத்துகின்றார்கள்
அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு
சான்றிதழ்கள் வேறு....
எனது ஆயுட்காலம்
அவரவர் எனை கையாள்வதை பொறுத்தே
தீர்மானிக்கப்படுகின்றது....
பெண்ணே...!
நானென்ன உன் கணவனா..?
பிறகு ஏன்...?
எனை அடித்தே துன்புறுத்துகின்றாய்..
உன் குழந்தையை போல் நினைத்து
எனை இதமாய் வருடு....
ஆணே...!
நானென்ன உன் மனைவியா...?
பிறகு ஏன்
எனை அடித்தே காயப்படுத்துகின்றாய்
எனை உன் காதலியாய் நினைத்து
உன் விரல்களால் முத்தமிடு...
என் தாயுடனான உறவு நீடிக்கின்றது
இன்னம் வெட்டப்படாத
எனது தொப்புள்கொடியால்
USB CABLE....
குறிப்பு : இந்த கவிதை KEYBORAD நம்மிடம் அகப்பட்டு சித்ரவதைபடுவதை
மையமாய் வைத்து சிந்தித்தவை.......