தவறான தலைப்பு
தவறான தலைப்பு
எப்பொழுதும்
என் உயிரை ஊடுறுவும்
அவளது பார்வை
எப்பொழுதும்
என் உயிரை மலர வைக்கும்
அவளது புன்னகை
எப்பொழுதும்
என் உள்ளம் தொடும்
அவளது வார்த்தைகள்
எப்பொழுதும்
என் நிழலை தொடர நினைக்கும்
அவளது பாதங்கள்
எப்பொழுதும்
என் நினைவில் கலக்கத் துடிக்கும்
அவளது கனவுகள்
எப்பொழுதும்
என் இதயம் நனைக்கும்
அவளது அருகாமை சுகம்
எப்பொழுதும்
என் ஆன்மாவை உயிர்ப்பிக்கும்
அவளது அன்பு
எப்பொழுதும்
என் உயிர் பேணும்
அவளது அக்கறை
எப்பொழுதும்
என்னைப் பின் தொடரும்
அவளது நினைவுகள்
எப்பொழுதும்
என்னிடம் பேசிக் கொண்டிருக்கும்
அவளது மௌனம்.....
வர்ணனை
உடலும் உணர்வும் சார்ந்தது
எங்கள் காதல்
உள்ளமும் உயிரும்சார்ந்தது
எங்கள் காதலும்
வர்ணனைக்கு அப்பாற்பட்டது
என் காதலியும்
வர்ணனைக்கு அப்பாற்பட்டவள்
"காதலியை வர்ணித்து கவிதை"
எங்கள் காதலுக்கு இது
"தவறான தலைப்பு"