செயற்கை பேய்

சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை 'பேய்களை' உருவாக்க சோதனை மேற்கொண்டனர். சில மக்கள் பேய்கள் இருப்பதாக ஏன் பயப்படுகின்றனர் என்று அவர்கள் விசாரணை செய்து வந்தபோது, மக்களின் மூளையில் ஒரு தந்திரம் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தன்னார்வலர்களின் கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு ரோபோவை பயன்படுத்தி மூளைகளில் தென்படும் உணர்வு ரீதியான சிக்னல்களை இடையூறு செய்ய வைத்து பயமுறுத்தும் உணர்வுகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மூளையில் செயல்படும் உடல் அசைவுகளில் இருந்து வரும் போலித் தோற்றம் தாமதமாக வந்தது. இது தங்களது சொந்த மூளையில் ஏற்படும் மாற்று எண்ணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர் என்று 'பேராசிரியர் Olaf Blanke கூறியுள்ளார்.

பேய் இருக்கிறதா? என்ற கேள்விக்கு இறுதியாக விஞ்ஞானிகள் பதில் அளித்துள்ளனர்....

ஆய்வுக்கூடத்தில் பேயின் போலித் தோற்றத்தை கற்பனை செய்யத்தூண்டும் பேயின் சோதனை முறை (spooky experiment) நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் இது எல்லாமே நம் மனதில் ஏற்படக்கூடிய ஒரு தந்திர விளையாட்டு ஆகும். பல நூற்றாண்டுகளாக மக்கள் கண்ணுக்கு தெரியாத, பேய் இருப்பது போன்ற உணர்வு வெறும் மூளையில் ஏற்படும் வெவ்வேறு சிக்னல்கள் ஒன்று சேர்வதன் தொகுப்பு ஆகும். தன்னார்வலர்களின் கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு ரோபோவை பயன்படுத்தி மூளைகளில் தென்படும் உணர்வு ரீதியான சிக்னல்களை இடையூறு செய்ய வைத்து பயமுறுத்தும் உணர்வுகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த சோதனையின் போது இரண்டு தன்னார்வலர்கள் தங்களை சுற்றி பேய்கள் இருப்பதாக உணர்ந்து பதட்டமடைந்தனர், அதனால் சோதனையை நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் அவர்கள் சோதனையின் போது நான்கு மாயத்தோற்றங்கள் வந்ததாக கணக்கிட்டுள்ளனர், அவை எதுவும் நிற்கவில்லை என்றும், கண்ணுக்கு தெரியாத விரல்களால் தங்களின் முதுகை தொட்டதாகவும் கூறியுள்ளனர். இந்த சோதனையில் மொத்தமாக 12 பேர் பங்கேற்றனர், அனைவரும் ஆரோக்கியமானவர்கள். அவர்களில் 2 பேர் இந்த சோதனை மூலம் மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டு இந்த சோதனையை நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.

## நன்றி தினகரன்

எழுதியவர் : சேர்த்தது (16-Jul-15, 3:43 pm)
சேர்த்தது : தமிழ்வாசன்
Tanglish : seiyarkai pei
பார்வை : 370

சிறந்த கட்டுரைகள்

மேலே