என் காதலி
என் காதலி
கொடியிலே பூத்த முல்லை
என்று உன் இடையினில் வருடிய தென்றல் சொன்னது....
மலரிலே உறிஞ்சிய தேன்தான் என்று உன் இதழினில் அமர்ந்த
வண்டுகள் சொன்னது.....
இரவிலே மலரந்திடும் நிலவு என்று உன் முகத்தினில் படர்ந்த கதிரவன் சொன்னான்...
பனியினிலே பூத்த தாமரை
என்று உன் பாதத்தை வருடிய
பைங்கிளி சொன்னது....
தேனினிலே மூழ்கிய திராட்சை என்று உன் செவ்விதழ் தொட்ட தேனீ் சொன்னது....
மதுவிலே கொஞ்சிய அமுதது என்று உன் மெல்லுடல் தழுவிய மருதம் சொன்னது.....
கனவிலே வருகிற தேவதை
என்று உன் நிறத்திலே மயங்கிய
கவிகுயில் சொன்னது.....
மஞ்சத்திலே தவழும் தேனிலவு
என்று உன்மடியில் தவழ்ந்திட்ட
வெண்பனி சொன்னது.....
மதுவிலே மயக்கும் மாதவி
என்று உன் அழகினில் மயங்கிய
நிலவு சொன்னது.....
மனதிலே வருடிடும் தூதுகள் சேதியால் மயங்குது, துடிக்குது
என் கைகள்......
என் ஆசை காதலியே!!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
