தூயவள்

தனிமை என்னும் தாழ் திறப்பவள்
என் உயிருக்கும் சற்று காற்று வர!

என் விடுமுறைகளை நிறைத்தவள்
அதிகம் விளையாடியது அவளோடு தான்

என் அன்பிற்கு ஏங்கியவள்
அதனால் பல சமயங்களில் ஏமாந்தவள்

எதையும் எதிர்பாராதவள்
தவறுகளோடு என்னை ஏற்றுக்கொண்டவள்

நானும் கூட அவளை நேசிக்கிறேன்
என்ற உண்மை அறியாதவள்

பிறர் கண்களுக்கு புலப்படாத
என் நியாயங்களை அறிபவள்

தனிமைக்காட்டிலிருந்து எப்படி
தப்பிக்கிறேன் என்று தெரியவில்லை

அவள் பிரிவில் மீண்டும் அதனுள்
தொலைவது மட்டும் தெரிகிறது

அவளது அருகாமை மகிழ்வித்தாலும்,
அவள் தூய்மை என்னை
அழவைக்கிறது!

ஒரே வரிசையில் பெயர் துவங்குவதைத் தவிர
நமக்குள் ஒற்றுமை ஏதுமில்லை

உறவில் தங்கையானாலும்
உனக்கும் கடவுளுக்கும்
வேற்றுமை ஏதுமில்லை!

மழலை முதல் வளர்த்த அன்பெனும் மரம்
மரணம் வரை மலர்ந்து கொண்டே இருக்கும்

கடலின் ஈரமது என்றேனும் மறையக்கூடும்
ஆனால் என் மனம் உன்னை மறக்காதடி.......

எழுதியவர் : (17-Jul-15, 11:58 am)
பார்வை : 301

மேலே