மரணம்
திரும்பிய திசையெல்லாம் உன் முகமே தரிசனமாய்.
கேட்கும் பாடல்களிலெல்லாம் உன் குரலின் சங்கீதமே.
விட்டு எறிந்த பின்னும் வந்து ஒட்டிக் கொள்கிற உன் ஏக்கப் பார்வைகள்தான்.
வழிநடத்தவும் வகையில்லை வாழவும் வழியில்லை.
வந்து சில மணித்துளிகள் கலந்துரையாடிச் சென்றிந்தால் ஒருவேளை மகிழ்ந்திருப்பேனோ?
சென்றதை திரும்பிப் பார்த்து என்ன பயன்.
இறந்தபின் உயிர் திரும்புவதில்லை.