ஆதங்கம்
அது ஒரு வெயிற்கால மழை பொழுது....
கருகி கொண்டு இருந்த பூமியின் மீது தண்ணீரை தெளித்தமையால்...
இறந்து போன
வெப்பத்தின் ஆவி ஆகாயம் நோக்கி..
தார் சாலையில் இருந்து...
மழை நின்ற பிறகும் நான் நனைந்து கொண்டு இருந்தேன்...
திடீர் நதிகள் கால்களை தழுவிக் கொண்டு
எங்கோ ஓடிக் கொண்டு இருந்தது...
வானத்தோடு சேர்ந்து
கண்களும் இரண்டு துளிகளை சேர்த்து கொண்டது...
நானும் அதை மழை துளி போலவே காட்டிக் கொண்டேன்..
என் கண்ணீரும் சாக்கடையில் கலந்தது....
அருகில் மாதா கோவில்..
குழந்தை இயேசுவை
கையில் வைத்தவாறு
எல்லாருக்கும் ஆசி
வழங்குகிறார்..
பூட்டு போட்ட இரும்புக் கதவுகளுக்கு உள்ளே இருந்து...
வெளியே நிறைய மெழுகு வர்த்திகள் இறந்து போய் கிடந்தன தான்
எரிந்து போனதற்கான அடையாளத்தை மட்டும் விட்டு விட்டு...
ஒரு மெழுகில் மட்டும் கொஞ்சமாய் நெருப்பு துண்டு...
காற்றோடு போட்டி போட்டுக் கொண்டு..
புயலில் சிக்கிய
காகித கப்பல் போல...
அணைந்து விட்டது என்று நினைத்தேன்...
திடீரென எழுந்து வந்து காற்றிடம் மீண்டும் போரிட்டது...
மூன்று முறை இறந்து... பிறந்தது...
ஒழிந்து இருந்த மழையின் கடைசி துளி ஒன்று மெழுகில் விழுந்து..
காற்றுக்கு துணையாக நெருப்பை கொன்றது ...
இதே பார்த்து கொணடே நான்...
இறந்த மெழுகை
பார்க்காமலே ...
கடந்துவந்தேன்...
எனக்கு சாக்கடையில்
கலந்த என் கண்ணீரை துடைக்க விரல்கள் இல்லாத ஆதங்கம் இப்போதும்....
மஞ்சள் நிலா 🌙