இன்ப பட்டாம்பூச்சி-முஹம்மத் ஸர்பான்
ஏக்கங்கள் நிறைந்த வாழ்க்கையில்
ஊக்கங்கள் இன்மை தோல்வியின் முதல் படி.
பந்து கோளவடிவம் என்பதால் கையில்
அகிலம் என்று சொல்லலாகாது,
கோடிக்கணக்கான விந்து முட்டைகளில்
ஒன்று தான் சூலோடு கருவை விதைக்கிறது.
கடல்கள் கடப்பதற்கு சிறகுகள் காத்திருக்கும்
கூட்டம் முயற்சியை கையெழுத்தில் எழுதியதும் கிடையாது,
எறும்புகள் அளவில் சிறியது தான்
ஒரு துளி இனிப்புக்காய் இமயம் வரை
நடக்க முடியும் என்று நம்புகிறது,
விரலில் ஊனமிருந்தாலும் சிந்தைகள்
ஓடி ஆடி திரிதல் இனிது,அப்போதுதான்
வாழ்வில் இன்பமெனும் பட்டாம்பூச்சி
எல்லைகளின்றி சிறகடிக்கும்.