வேறு உலகம்
நாரை கொக்காய் பறந்து போனேன்
நாற்புறம் உலகை அளந்திட போனேன்
வானம்பாடியாய் வாழ்ந்திட போனேன்
வானவில்லை வளைத்திட போனேன்
வீசும் காற்றின் வாசமாய் போனேன்
பாடும் உழவனின் ஓசையாய் போனேன்
மின்னல் கீற்றினில் அமர்ந்திட போனேன்
கதிரவன் உடலை எரித்திட போனேன்
மேகமாய் வானில் மிதந்திட போனேன் விண்
மீனாய் நாளும் ஜொலித்திட போனேன்
தேடும் முடவர்க்கு தேனாய் போனேன்
விரும்பும் மனிதர்க்கு தென்றலாய் போனேன்
இந்த மெய்யுலகம் முழுவதும் மறந்து
என் கனவுலகத்தில் கரைந்து போனேன்