எப்போதும்.

தினம் தினம் உன்னை நீ புதுப்பித்தல் அவசியமே.
அவ்வப்போது உன்னை வந்து அடையும்
அத்தனை தூசுகளும் ஏனைய மாசுகளும்
உடனே களையத் தக்கவையே.
எனவே அவ்வப்போது உன்னை நீ
சுத்தபடுத்தி புதுபித்தல் மிக அவசியமே.
இவ்விசயத்தில் உதாசீனம் வேண்டாம்.
தூசுகளும் மாசுகளும்
நமது எண்ணங்களிலும் செயல்களிலும்
படியாமல் நாம் விழித்திருப்போமாக!
அன்பும் பண்பும் நிறைந்த செயல்களால்
உயர்வும் உற்சாகமும் உன்வசமே.
எனவே என் நண்பா,
எப்போதும் உன்னைப் புதுபித்துக் கொண்டிரு.

பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி. (18-May-11, 7:58 am)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 310

மேலே