எல்லோரையும் பொறுத்தவரை
அம்மா என்றால் அன்பும் சேர்ந்ததுதான்
ஆசை என்பது துன்பமும் சேர்ந்ததுதான்
கடல் என்றால் அலைகளும் சேர்ந்துதான்
காதல் என்றால் மேதல்களும் சேர்ந்துதான்
உறக்கம் என்றால் கனவுகளும் சேர்ந்ததுதான்
பெளணர்ணமி என்றால் நிலவும் சேர்ந்ததுதான்
சூரியன் என்றால் வெப்பமும் சேர்ந்ததுதான்
இதயம் என்றால் நட்பும் சேர்ந்ததுதான்
இளமை என்றால் காதலும் சேர்ந்ததுதான்
உடன்பிறப் பென்றால் சண்டையும் சேர்ந்ததுதான்
திருமணம் என்பது வரதட்சணையும் சேர்ந்ததுதான்
வெற்றி என்பது உழைப்பும் சேர்ந்ததுதான்
என்னைப் பொறுத்தவரை அல்ல
எல்லோரையும் பொறுத்தவரை.