மலர் சூடிய மலரே

மலர் சூடிய மலரே - உனக்கு
மலர் சூட்ட மனம் கொண்டே - உன்
மனம் தேடி வந்தேன் - என்
மனம் தேடி நின்றேன் - விண்
மழை தூவும் நேரத்தில் - கண்
இமைக்காமல் காத்திருந்தேன் - தேன்
சுமந்து வரும் இதழ் பார்த்தே - மண்
போர்த்திக் கிடக்கின்றேன் - உன்
கரம் கொடுத்து காப்பாயோ - என்
மனம் வெட்டி சாய்ப்பாயோ !

எழுதியவர் : mugil (22-Jul-15, 10:16 pm)
பார்வை : 148

மேலே