நினைவுகள் விற்பனைக்கு

மறதி ஒரு தேசியவியாதி
ஏனோ?அந்த நோய்
எனக்கு மட்டும் வர மறுக்கிறது ;
உன்
மந்திர புன்னகையில்
விரியும் காந்த விழிகளை
இதயத்தில்
ஆழமாய் பதித்துவிட்டாய்
அதில் பூத்த நினைவு மலர்கள்
வாட மறுக்கிறது......
வலை தளத்தில்
நிலம் தேடியும்
தொலைக்க
இடமில்லை;
மனதும்தான் ......
சுமந்து கிடக்கிறேன் .
எங்கு ?
போயினும்
வங்கியில் இட்ட பணம்போல்
நினைவுகள் வட்டியுடன்
திரும்புகிறது ...!
ஒன்று செய் பெண்ணே
அவைகளை
நீயே ! வாங்கிக்கொள்
உன்
நினைவுகள் விற்பனைக்கு .....

எழுதியவர் : சுரேஷ் குமார் (22-Jul-15, 10:32 pm)
பார்வை : 75

மேலே