முகவரி
முகவரிக்காட்டி
நீ
முறுவலித்ததில்
சபலப்பட்டது என்னவோ
உண்மை தான்......
ஆனால்
அதையும் தாண்டி
இதயம் பார்க்க
வைத்தவள் நீ!!!!
அங்கே எனக்கென
தனி காதல்
சிம்மாசனம்
அதில் சொக்கிப்போனது
நான் மட்டும் அல்ல
நீயும் தான்...
என்னசெய்வது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
என்னென்ன புரட்சிகள்
செய்தாலும்
"சாதிய"கொடுமையில்
காதல்கள்
கல்லறைக்கு
அனுப்பபடுவது மட்டும்
மாறவில்லையே !!!
வாய்விட்டுஅழுது விடு
மனம் திறந்து கதறிவிடு
உனது பயணத்தில்
எனது பாதைகள் மறக்கப்படட்டும். .
ஜென்மங்கள்
நம்பாத போதும் ...
மீண்டும் பிறந்தால்
இறைவனிடம்
கேட்கிறேன்
தாயாக அல்ல
நீ எந்தன்
சேயாக பிறக்க...