அழகின் அரரிசியே
...."" அழகின் அ(ர)ரிசியே ""...
பாமரனின் வியர்வையில்
பணம் காய்க்கும் செடியில்
சிரிக்கின்ற முத்துக்காய்
நெல்மணிகள் மின்னுதம்மா !!!
அன்னமே உனைக்காண
அன்னை தேசம்விட்டேன்
அடுப்பில் உலைகொதிக்க
வெப்பத்தில் குளிக்கிறான் !!!
அரசியலும் "அரசி"யான
உன்பெயரை சொல்லியே
அரியணையை அலங்கரித்து
அழகாகவே நடக்கிறது !!!
ஏழையின் வீட்டிற்கு வராத
மனிதன் பிரிவினைபோல்
உயர்ந்தது தாழ்ந்ததுமென
நீயும்தான் எத்துணை வகை !!!
கழனியாளும் அரசனும்
விதியினை நொந்தவாறே
விதைத்தே அழுகிறான்
உண்ண உணவில்லையென !!!
என்றும் உங்கள் அன்புடன்,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...