அழகு பிசாசு

விரல் இடுக்கில்
நீ கானும் பேய் படம்
ஒரு நாளாவது நான்
கான வேண்டும்.....
****
எத்தனை முறை சொல்வது என் முன்னே கூந்தல் ஒதுக்காதே
என்று இப்போ பார்
என் கண்கள் மந்திருச்சு விட்ட
கோழி போல் ஆகுதடி....
****
நான் தூங்கும் போது
தீடிரென விழித்தேன்
நீ என்னையே பார்த்து
கொண்டுயிருந்தாய்
இது போதாதா
நான் விழிப்பதற்கு...
****
கடிகார சத்தம்
கூட உன் தூக்கத்தை
கலைக்க கூடும்
என்று தான் முட்கள்
இல்லாத கடிகாரம்
தேடுகிறேன்.....
****
உன் வீட்டில்
உள்ள தென்னை
மரமாக மட்டும் என்னை
மாத்திவிடு
நீ குளித்த
தண்ணீர் குடித்தே
பிழைத்துகொள்வேன்...

எழுதியவர் : (23-Jul-15, 8:38 am)
சேர்த்தது : சத்தியதாஸ்
Tanglish : alagu pisasu
பார்வை : 194

மேலே