ஐந்தறிவும்__ஆறறிவும்--3
மின்கம்பியில் அடிபட்டு மாண்ட
காக்கையைச் சுற்றி
ஒரு நூறு காக்கைகள்
ஓயாது ஓலமிட்டபடி...
சாலையில் அடிபட்டு மாண்ட
சகமனிதனைச் சுற்றி
அற்ப மனிதர்கள் பலர்
அலைபேசியில் படமெடுத்தபடி...
செத்தது
மனிதனா...
மனிதமா...?
-------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்