விந்தை மனிதர்கள்

எதையெதையோ
அசை போட்டபடி
பேருந்தின் இருக்கையொன்றில்
நான்..
..
சுற்றி நடப்பவை எதுவும்
தெரியாத நிலையில்
நான்..
..
கவனத்தை சிதறடித்து
காதுகளை செவிடாக்கும்
இரு பெண்மணிகளின் சண்டை...
..
பூக் கூடையுடன் ஒருத்தி..
மீன் வாடையுடன் ஒருத்தி..
..
காது கூசும்
வார்த்தைகள் ..
கண்டக்டர் உள்பட
யாருமே தடுக்கவில்லை..
..
எல்லோருமே உள்ளுக்குள்
ரசித்தபடி..
..
அடுத்த நிறுத்தத்தில்
அவசரமாய்..
இறங்கிக் கொண்டு..
அடுத்த பேருந்தில்
தொடர்ந்தேன் பயணத்தை..
...
வேடிக்கை..
இலவசமாய்க் கிடைக்கிறது
என்பதற்காக..
இப்படியுமா இருப்பார்கள்..?
..