திருக்குறள் தேசிய நூலானால்

புவி விசையின் திசையும்
கொஞ்சம் இடம் மாறும்

ஓசோனின் ஓட்டையடைக்க
ஓசோன் துண்டுகள் கொஞ்சம் உருமாறும்

செயற்கை கோள்கள் கூட
இன்னும் கொஞ்சம் காலம் கூட ஆயும்

இயற்கைகள் கூட இயற்கையாய்
பூமியில் கொஞ்சம் நடை போடும்

வான் மழையும்
மண்ணுக்குக் கொஞ்சம் உரம் போடும்

பூகம்பத்தின் பூக்கள் கூட
பூமிமீது கொஞ்சம் இரக்கம் காட்டும்

சுனாமியின் திசைகள் கூட
கொஞ்சம் கடலுக்கே திசைமாறும்

பஞ்சம் கூட பக்கம் வர
கொஞ்சம் பதுங்கி நின்றாடும்

கொஞ்சம்கூட வஞ்சமும்
நஞ்சு தின்னு போய் சேரும்

அரசியல் வானம் அதிசயம் கூட்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் நேர்மை தலை காட்டும்

சமூகப்பிழை சரித்திரமாய் மாறும் நிலை
சாய்ந்து ஒழிந்தே போகும்

பிறவிகளைப் பிரிக்கும் நிலை
பிறப்பிலேயே சாகும்.

கெடுதியோடு கட்டும் அணைகள்
மடை திறந்து சாடும்

டில்லியின் கற்பழிப்புக்கு
கடும் பஞ்சம் வந்து சேரும்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உலகம்
நீங்கள் ஆழக் கிடைக்கும்

திருக்குறளைத் தேசிய நூலாக்கிப் பாருங்கள்
உங்கள் புகழ்
ஒவ்வொருவருக்குள்ளும்
தோன்றி தோன்றி பிறக்கும்

எழுதியவர் : செ.பா. சிவராசன் (25-Jul-15, 12:31 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 1258

மேலே