இன்னும் செய்ய வேண்டியது
கவிதைகள் என்று ..
..
என்னைப் புரட்டிப் போட்ட ..
பழைய கால நினைவுகளை
பதிந்தாயிற்று..
என்னை பாதித்த ..
நிகழ்கால நடப்புகளையும்
சொல்லியாகி விட்டது..
என் கற்பனைக்கெட்டிய..
வகையில் .. விஞ்ஞானத்தின் ..
பக்கங்கள் புரட்டி..
அடுத்த ..அதற்கப்பால் வரப்போகும்
நூற்றாண்டுகளின்
அற்புதங்களை உருவகப் படுத்தி ஆயிற்று..
அம்மா..
அப்பா..
குரு..பள்ளி..
கடவுள்..சாதி..மதம்
காதல்....தயை..
இன்னும்..எல்லாம்
சொல்லி சொல்லி எழுதி ஆயிற்று..
..
சரக்கு போதவில்லை என்றாலும் கூட..
வேற்று மொழிக் கவிதைகளை..
மொழிபெயர்த்தும் பார்த்தாயிற்று..
..
இன்னும்..
இன்னும்..
..
செய்ய வேண்டியது
ஒன்றுதான் பாக்கி..
..
உண்மையாக..
உண்மையான..
"கவிதை" ஒன்று
எப்படியேனும் ..
எழுதி விட வேண்டுமென்பதுதான்
அது..!