நீ பொழிவாயென

நடுநிசியில்
சுழன்றடித்துக்
கொட்டித் தீர்த்தது மழை !

கதவை இழுத்து மூடி
கட்டிலில் முடங்காமல்
சாளரம் திறந்து
சாரலில் குளிர்ந்து
சத்தமுடன்
சிந்தும் பெயலை ரசித்தேன் ...!

அவ்வப்போது
வெட்டிச் சென்ற மின்னலும்
செவிப்பறையை
அதிரச்செய்த இடியும்
அச்சமூட்டினாலும் .....

அழகே உன்னை
ஆராதிப்பேன் !
வானமுதே
காத்திருப்பேன் என்றென்றும்
நீ பொழிவாயென ....!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (27-Jul-15, 8:02 pm)
பார்வை : 427

சிறந்த கவிதைகள்

மேலே