கலாமே காகிதமே

தேசம் விரும்பும் தேவனே..
வாசம் துறந்த பூவனே...
கலாமே...!
நீர் காலமாகவில்லை...
காகிதமானீர்...

மறையும் நும் மயிரும்
மாண்புடனே தூரிகையாகும்...
உறையும் செங்குருதியும்
உகந்த நன் மையாகும்...

வரைந்திடுவோம் நல்ல ஓவியம்...
வானுயர படைப்போம் காவியம்...
என் கவியும் உயிர்ப்பெறும்...
என் கனாவும் உருபெறும்...

பிரியமானவரே,
பிரியாவிடை உமக்கு
பூவுலகினின்று...

எழுதியவர் : அஞ்சா அரிமா (27-Jul-15, 10:42 pm)
பார்வை : 104

மேலே