விஞ்ஞான சிந்தைக்கு உரம்
ஏவுகணை மனிதா!
எமதருமை தமிழ்
தாயின் விஞ்ஞானப்
புதல்வா!!
மூப்பாட்டனால்
அக்னிக் குஞ்சானோம்!
உம்மின்
அக்னி சிறகு
கொண்டு அணுஆயுத
வானில் வானுயுரப்
பறந்தோம்!!
கனவு காணச்
சொன்னாய்!
உம்மைப் போல்
20 விஞ்ஞானிகளை
2020ல் உருவாக்க...
பெருங்கனவு காண்கிறோம்!
உமது
உயிர் பிரிந்திருந்தாலும்
உடல் சிதைந்திருந்தாலும்
எமது விஞ்ஞான
சிந்தைக்கு உரமாய்
என்றும் நீங்கள்
எங்களோடு!