மீட்டும் மௌன ராகம்

தேடிச் சென்று பூவில்
***தேனை யுண்ட வண்டு
பாடிக் கொண்டே பைய
***பக்கம் பார்த்துப் போகும் !
ஆடிக் காற்று வீச
***ஆட்டம் கண்டு அஞ்சி
மாடி வீட்டி லேறி
***மௌன ராகம் மீட்டும் !



(ஆறு தேமா )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (29-Jul-15, 1:52 pm)
பார்வை : 112

மேலே