இழப்பு
ராமனும் ஈசனும் இணைந்த மண்ணில் தழைத்த விருட்சமே..
இப் பாரதத்தின் பெருந்தவமோ நீ!!
கிடைபதர்கறிய வரமோ நீ!! உன்னை ஈன்ற இம்மன் புனிதமடைந்தது..
சிறுமியரின் ககரம் பற்றி!!
இளைனரின் தோல் தட்டி!!
இளைய பாரதத்தை உன் உரையால் சூளுரை புனையச் செய்தாய் வெற்றி வாகை சூட!!
எனில் அடங்கா சாதனைகள்!!
எழுத எழுத தீரா செயல் திட்டங்கள்!!
உலகத்தின் பார்வை அனைத்தும் உன் பக்கம்!! அதுதனில் தானோ கண்பட்டதோ எங்கள் இதய ஜீவனுக்கு!!
எப்படி இம்மண்ணை பிரிய மனம் வந்ததது உமக்கு!
முதுமை தங்களை வாட்டியதா!!!
பொறுப்புகள் உங்களை தைத்ததாலா!!
மரணத்திற்கும் உமை தீண்ட ஆசை போலும்..
எத்தனை இழப்புகளையும் இம் மண் தாங்கும்!! தமிழ் தாயின் தலை மகனே உன் இழப்பை எங்ஙனம் தாங்கும்!!
பேதம் பாராமல் அனைவரின் இதயத்தில் இழைத்திருக்கும் இந்த்தியனே!!!
எப்போது மலர்வாய் மீண்டும்!
மரணம் எனபது உடலுக்கு மட்டுமே உன் ஆத்மா அழிவற்றது!!!..
மீண்டும் புனர்ஜென்மம் பெற்று வந்துவிடப்பா!!
எனது மாப்பெரும் சுயனலதினில் விளைந்த வேண்டுகோள் இது நிறைவேற்றிட நிபந்தனை இடாதே!!
ஏனெனில்..
2020 வரவில்லை.. நியுட்டரிநோவும் எழவில்லை.. இஸ்ரோவின் பற்பல செயல் திட்டங்கள் கடமைகைகளாய் உன் காலுக்கடியில்!!
எழுந்துவா!!
மீண்டும் பிறந்துவா!!
எழுச்சிமிகு பாரதம் பூரனதுவம்மடைய யுவனாக மீண்டும் வாருங்கள்!!!