கலாமுக்குபுகழஞ்சலி

அன்பு காட்டுவதில் அன்னை தெரசா
அரவனைப்பதில் ஆண்வடிவ அன்னை
எளிமையில் மகாத்மா காந்தியடிகள்!

வள்ளுவ நெறியை வாழ்வியலாக்கிய
வள்ளலார். வளமார் தமிழன்,
அறியல் தந்தை அப்துல்கலாம்!

தாய்மொழிக் கல்வியின் மூலமே
தரணிபோற்றும் விஞ்ஞானியாய்
விளங்கமுடியும் என்பதற்கு விளக்கமானவர்.!

குடியரசுத் தலைவராயிருந்து
ஆசிரியப் பணிசெய்த
அதிசய மனிதர்.!

வாழ்ந்த வாழ்வை வரலாறாய்
மாற்றிய வைர நெஞ்சர்.
மண்ணில் ஒரு விண்!

இதியாவின் பெருமையினை
எவரெஸ்ட் சிகரமென உலகிற்கு
உணர்த்திக் காட்டிய உண்மைத் தமிழன்!

வல்லரசு நாடுகளை எல்லாம
வாய்பிளக்க வைத்த
வண்டமிழ் மறவன்!

இளைஞர்களின் எழுச்சி நாயகன்
அறிவியல் அறிஞர்.
அணுத் தந்தை!

எழுதியவர் : புலவர் ச.ந.இளங்குமரன் (29-Jul-15, 8:37 am)
பார்வை : 52

மேலே