கேட்கிறதா உங்களுக்கும்

வானுலகில் இப்போது
வெற்றிக் கொண்டாட்டம் !

மண்ணுலகிற்கு அனுப்பிய
இயற்கைக் கோள் ஒன்று
எண்பது ஆண்டுகளுக்கும் மேலாய்த்
தன் பணிகள் செவ்வனே ஆற்றிய பின்
வானிறங்கி விட்டதாம்
வெற்றிகரமாய் !!!!!!!!

வெற்றிமுழக்கம் கேட்கிறதா உங்களுக்கும் ?
பிரபஞ்சத்தின் செல்லப் புதல்வன் கலாமுக்கு .....ஜே !

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (29-Jul-15, 8:57 am)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 53

மேலே