என் தேசத் தந்தை கலாம்

எளிமை என்றால் காமராசு என்பா்
என் கால காமராசர் நீயல்லவா...

அன்பு என்றால் தெரசா என்பா்
என் மண்ணில் உதித்த தெரசா நீயல்லவா...

எழுச்சி என்றால் விவேகானந்தர் என்பர்
நான் கண்ட எழுச்சி நாயகர் நீயல்லவா..

தேசத்தந்தை மகாத்மா என்பர்
எங்கள் நவீன தேசத்தின் தந்தை நீயல்லவா...!

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மேதைகள் வாழ்ந்திருப்பர்
ஒரே காலத்தில் வாழ்ந்த ஒட்டுமொத்த மாமேதையும் நீயல்லவா...!

உருகி உருகி எழுதத் துடிக்கின்றேன் உன்தன் புகழை..
எழுத எழுத தீராதய்யா உன் புகழ்க் கவிதை...!

என் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்
உன் திருவடியில்...
உன் கண்ணியத்தை கடைப்பிடிப்பேன்
என் வாழ் முழுதில்...!

எழுதியவர் : அருண் வேந்தன் (29-Jul-15, 2:22 pm)
சேர்த்தது : அருண்வேந்தன்
பார்வை : 125

மேலே