பிரியமானவர்க்குப் பிரியாவிடை

கலாம் காலம் ஆனார்
ஏவுகணை நாயகனை
சாவுதனை ஏவி விட்டு
சதிகார காலன்
பறித்து சென்றான்...
இரண்டாம் தேசப் பிதா
எம்மில் இரண்டறக் கலந்தவர்
தேசத்தை
கலங்க விட்டு சென்றார்..
வாய்மைக்கும்
தூய்மைக்கும்
சொந்தக்காரார்
எம் இளஞ்சோட்டு
பிள்ளைகளுக்கு
நம்பிக்கை நங்கூரம் பாய்ச்சியவர்
எளிமைக்கும்
மன வலிமைக்கும்
எடுத்துக் காட்டு....
தரித்திரத்தில் பிறந்து
சரித்திரத்தில்
இடம் பிடித்த பெருமான்....
லட்சிய தாகத்தால்
உச்சிக்குப் போனவர்
லட்சோப லச்சடம்
இந்தியர்களின்
கண்ணீர் பிரளயத்தில்
இன்று கடந்து வருகிறது அண்ணாரின்
பூவுடல்......
அக்கினிச் சிறகு கொண்ட எம்
பொக்கிஷப் புறா
ஆகாசப் பாதையில்
பறந்து போனது...
விண்வெளி விஞ்ஞானத்தில்
எம் தேசத்தை
வீறு கொண்டு நடத்தியவர்....
மெய்ஞான சோதியில்
ஐக்கியமானார்...
எம் தேசத்தின் மூத்த
ஆசிரியன்....
தான் நேசித்த
மாணவப் பட்டாளம்
புடை சூழ
போதிக்கும் போதே
இன்னுயிர் நீத்தார்....
உம் பூவுடல்
பூமி நீங்கினாலும்
உம் போதனைகள்
அண்டவெலியெங்கும்
ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும்..
உங்கள் கனவு
மெய்ப் பட
இளைய பாரதம்
உறுதி பூண்டு
இந்திய தேசத்தை
வல்லரசாக்க அயராது பாடுபடுவோம்...
ஓய்வின்றி நீர்
உழைத்தது கண்டு தான்
உம்மை
உயரே அழைத்துக் கொண்டான்...
மரணம் உம்மை
எங்களிடமிருந்து
பிரித்தாலும்
எம் நினைவுகளில்
கனவுகளில்
நீர் என்றுமே
இருக்கிறீர்...
கண்ணீர் கரை புரள
கரம் கூப்பி வணங்குகிறேன்
நவீன இந்திய சிற்பியே...
எம்முள் என்றென்றும் நீவிர்.......