இதுதான் காதலோ

தூக்கங்கெடுத்த தூயவள் -என்
கனவினில் வந்துகாதல் சொன்னாள்
கசிந்துநின்றாள் கடிந்துகொண்டாள்
பகலில் நான் நடந்ததைச் சொல்ல
ஊசிவிழி கொண்டு உயிரைக்குத்தி
உதிரம் உறையவைத்து
உணர்ச்சி மட்டுப்பட உணர்வைத்தூண்டி விட்டாள் -ஒரு
ஊடகமில்லை ஊடல்களில்லை
உடலும் கலக்காமல் உயிர்கள்
பிரிந்து சேர்ந்தது
இதுதான் காதலோ !!!

எழுதியவர் : கொட்ரூம் (30-Jul-15, 2:58 pm)
சேர்த்தது : கொட்ட்ரூம்
Tanglish : ithuthaan kathalo
பார்வை : 62

மேலே