வாசனை வாசகங்கள்

இந்த நிலை மாறும் ..
@
படி, தெளி , பயன்படு
@
தாவணிகள் இல்லையெனில்
தாடிகள் இல்லையடி பாப்பா
@
அணில் பற்றி எழுத
மரம் ஏற தேவையில்லை
@
ஆடையில் தொடங்கியது
ஆதாமின் அழிவு
@
பெண்ணோடு பழக
பொய் பழகு .
@
பணமிருந்தால் பதவியுண்டு .
@
விவாகமும் , விவாகரத்தும்
இருவரின் ஒப்புதலின்றி அமையா.
@
ஆசை அழிவில்லாதது ,ஆனால்
அழிக்க வல்லது .
@
கீரை விற்ற பணமெடுத்து
கீதை வாங்காதே
@
அட்சய பாத்திரங்கள்
அழகை இருக்க தேவையில்லை
@
இளைஞர்களே அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள்
அது ,
பிரபலங்கள் நடித்த அரசியல் படம்
வந்தாலும் வரலாம் ,
வராமலும் போகலாம் ..
@
புரட்சிக்கு வறட்சி வந்தது
நம்நாட்டில் தான்
@
அந்தி பார்த்தேனும்
சிந்தி .
@
கன்னியுடனும்
கணினியுடனும்
அளவோடு பேசு .
@
பணம் இருப்பவனுக்கு
நண்பனும் எதிரி ..
@
வானம் அழகானது
பூமிதான் நிலையானது
@
போதி மரம் எதற்கு
பொண்டாட்டி போதும்
@
கற்களுக்கு அமிர்தம் இடு
ஏழைகளுக்கு விஷம் கொடு
@
யானையை வெல்ல
எறும்பிற்கும் யோகமுண்டு
@
உலகில் உயர்ந்த சாதி
அவரவர் பொஞ்சாதி
@
ஆங்கிலத்தில் ஐயும் ஐயும்
இணைந்தால் காதல் .

தமிழில் மெய்யும் மெய்யும்
இணைந்தால் உயிர் அவ்வளவே ..
@
சிலைகளிலும்
சிலுவைகளிலும்
சிலந்திகள் வாழட்டும் ,
மனிதர்கள் கூடா.
@
பணம் பரீட்சையும் எழுதும்
@
வரதட்சணை வில்லொடித்தாலும்
சீதைகள் கிடைப்பதில்லை
@
ஆடைகள் மறைப்பதற்கே
மறந்தனர் பலர்
@
முன்புதான்
பகலில் கண்ணகி
இரவில் மாதவி .

இப்போதெல்லாம் எப்போதுமே
காஞ்சனா தான்
(சூறை காத்த போல வராடா)
@
கற்பும்
கற்பழிப்பும்
ஆண்களைப் பொறுத்து
@
முன்னிரவில் முத்தம்
பின்னிரவில் எழுப்பும் .
@
புத்தகமறிந்து படி
@
காதலித்து பார்
காதலியை பார்க்காதே
@
உன்னை உற்று பார்
உழைப்பு வரும்
@
வான் வரை செல்ல
பூமியில் அஸ்திவாரம் தேவை
@
நெருப்புக்கோழி கூட
தீ மிதிக்காது .
@
கவிதையை பாராட்டு
கவிஞனை தூக்கிலிடு
@
எதை யோசிக்கிறோம்
என்பதில் இல்லை ,
எப்படி யோசிக்கிறோம்
என்பதில் உள்ளது புதுமை
-கண்ணதாசன்
@
சிறகிருந்தால் போதும்
சின்னதுதான் வானம்
-வைரமுத்து
@
எழுது, வாசி
அழு , சிரி
எல்லாம் சரியாகும் .
-லீனா மணிமேகலை
@

எழுதியவர் : தினேஷ் sparrow (31-Jul-15, 8:09 pm)
Tanglish : vasanai vasakangal
பார்வை : 198

மேலே