மீனவன் வாழ்வு
வயது முதிர்ந்த அம்மா அப்பா
மனைவி ஆறுக்குழந்தைகள்
அதிலும்
ஐந்துக்குழந்தைகள் பெண் யென
எல்லாம் எனக்கு தந்த கடவுள்
வறுமையும் தரும் வள்ளலாகி போனான்
அந்த வள்ளல் தந்த
வாழ்வை வாழ
பலரையும் வாழ வைக்கும்
தாய்மடியாம் உன்னிடம்
கை ஏந்துகிறேன் வலை வீசி
உயிரானவற்றை கொன்று தின்றும்
மனிதனுக்கு உயிரான உறை
பொருளானவற்றை உன்னிடம் கேட்கிறேன்
நான் வலை வீசி
நீ இரக்கப்பட்டு வலிய
தந்த மீன்களுக்கும்
கரையிலிருந்தபடி ஒருவன்
அடிமாட்டு விலைக்கு பிடிங்கிக் கொள்கிறான்
பொதுவுடைமை பேசும் பலரும்
பேசி மட்டுமே கொண்டிருப்பார்கள்
எம் நாட்டில்
மெய் வருத்த கூலி தரும்
பழமொழி யெல்லாம் பழைய மொழியானது
எனது வறுமையில்
மீதம் கொண்ட பணத்தை கொண்டு
என் மனது வாழக் கற்றுக்கொண்டாலும்
வயிறு வாழக் கற்றுக் கொள்வதில்லை
அரை வயிற்றை நிறைத்து
அரை வயிற்றை ஈரத்துணியால்
கட்டுவதில் தான் எங்கள் வாழ்வில் ஆனந்தமோ
எங்கள் விழிகளில் கசியும்
உவர்ந்த நீருக்கு மட்டும் தெரியும்..............
பாரதி.செ