தெரிஞ்ச கதை சொல்லப்போறேன் தெரியாதவங்க கேட்டுகோங்க

ஞான குரு ஒருவற்கு
முட்டாள் சீடர் இருவர்தான்
ஞானம் அடைய முயற்சித்து
நாளும் கலகம் செய்தனரே..
அவர்கள் தவறை சுட்டிக்காட்ட
குருவோ செய்தார் குறுஞ்சோதனை..
கொடுத்தாரே சல்லடை
கூறினாரே நீரால் நிரப்பிட..
அள்ளி அள்ளி பார்த்தனரே
அளவு நீரும் அதில் இல்லை..
குரு சொல்லை மறுக்காமல்
குலம்பினரே குளக்கரையில்..
முயற்சிக்கு பலனில்லை
முனங்கினர் குருவிடம்..
குருவும் வந்தார் குழப்பம் நீக்கிட
அதை
குளத்தில் வீசினார் நீரும் நிறைந்திட..
சல்லடையும் மிதந்தது
அதில் நீரும் நிறைந்தது..
அறிவுகடலில் உனைநிரப்ப
உனை அறிவுக்கடலில் தூக்கிஎறி
கருத்தென கருத்தாய் குரு சொன்னார்
கருத்தை மறைத்த திரை விலகவே..

எழுதியவர் : தீபாகுமரேசன் (2-Aug-15, 11:47 am)
சேர்த்தது : தீபாகுமரேசன் நா
பார்வை : 59

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே