கல்யாணமான புதுசு

கல்யாணமான புதுசு.

மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தப்போ,

“மாமா”

“என்ன மாப்ளே…?” என்றார் என் மாமனார்.

“இல்லை…உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்” என இழுத்தேன் நான்.

“அட எதுக்கு வெட்கப்படுறீங்க…சும்மா கேளுங்க”

“இல்லை… நான் இருக்குற வீட்ல இருந்து ஆபிஸ் ரொம்ப தூரம்…ஒரு பைக் வாங்கிக் கொடுத்தீங்கன்னா……”

“அதுக்கென்ன வாங்கி கொடுத்துட்டா போச்சி…இதை கேக்குறதுக்கா தயங்குனீங்க?”

“இன்னொன்னும் பண்ணனும்”

“இன்னொண்ணா…சொல்லுங்க”

“பெட்ரோல் போடுறதுகு மாசம் ஒரு 1500 ரூபாயும் கொடுத்தீங்கன்னா…..”

கடகட வென சிரித்துவிட்டு சொன்னார் என் மாமனார்,

“அதுக்கென்ன மாப்பிள்ளே…கொடுத்துட்டாப் போச்சு…” என்றவர்,

“நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கவா?” என்றார்.

கேட்டது கிடைத்துவிட்ட சந்தோசத்தில்,

“சொல்லுங்க மாம” என நான் சொல்ல,

அவர் சொன்னார்,

“வண்டி ஓட்டி நீங்க எதுக்கு கஷ்டப்படணும் … அதையும் நானே ஓட்டிக்கிறேனே”

நன்றி முகநூல்

எழுதியவர் : முகநூல் (3-Aug-15, 4:07 pm)
பார்வை : 105

மேலே