கட்டுரை
எத்தனை முட்டாள்தனமாய் இருந்திருக்கின்றனர் நம் முன்னோர் ???
"வயதுக்கு வந்தபெண் நன்றாய் ஓய்வெடுக்கவும் , மனவுலைச்சல் தவிர்க்கவும் சடங்கென்ரும் தீட்டென்றும்
சொல்லி மகிழ்வித்தும் யதொருப்பணியும் செய்யாதப்படி காத்தும் " மூட நம்பிக்கை சாயம் பூசி பெண்ணடிமை வண்ணம் தீட்டி மனவுள்ளச்சளுக்குள்ளும் மாளாத பலவீனத்திற்கும் ஆளாக்கிய நாமல்லவா புத்திசாலிகள் ?
"பிள்ளைதாச்சி இருந்தா மொட்டை போடாதே தேங்காய் உடைக்காதே என்று சொன்னாரே பிள்ளைக்கு மழலையின் அழுகுரலும் , ஒருவேளை அழிகிபோனதேங்காய் குடும்பத்துக்கு ஆகாதே என கவலை படும் அன்னையாலும் வயிற்றில் இருக்கும் மழலை கவலை கொள்வதைப்பற்றி இவர்களுக்கென்ன ? மகிழ்ச்சியே சிறந்தவலர்சிக்கு வழி என்று அறிவியல் விளக்கம் அளித்தனர? எத்தனை முட்டாள்தனமாய் இருந்திருக்கின்றனர் நம் முன்னோர் ???
பச்ச உடம்புக்காரி வாசப்படி தாண்டகூடது , துடைப்பம் எடுக்ககூடாது பாரம் தூக்கக்கூடாது அப்பப்பா எத்தனை கட்டுப்பாடுகள் . அதிகமாய் அலைச்சல் இருந்தால் உடல் கெட்டால் என்ன ஏன் இந்த கட்டுப்பாடுகள் எத்தனை முட்டாள்தனமாய் இருந்திருக்கின்றனர் நம் முன்னோர் ???
மாதந்தோறும் வேலையிருப்பினும் கட்டாய ஒய்வு மூன்று நாட்களுக்கு சாமி சண்டைய போடப்போவுது எல்லாத்தையும் நீயே சமச்சிடு நா தண்ணீர் தெளிச்சிட்டு படச்சிக்கிறேன் , இடுப்புக்கும் உடலுக்கும் ஒய்வு தேவை என்றே தேட்டேன்ரும் சாமிகுத்தமேன்றும் சொன்ன நம் முன்னோர் எத்தனை முட்டாள்தனமாய் இருந்திருக்கின்றனர் நம் முன்னோர் ???
அனைத்தையும் அறிவியலை அறியாது அறிவியல் பெயர் சொல்லி முட்டாள் தனத்தின் முகவரியாக நாமிருந்துகொண்டு . அறிவியலின் உச்சம் தொட்டு மக்கள் கடவுள் பெயரால் சொன்னால் மட்டுமே நம்புவர் என்றுணர்ந்து சொன்ன நம் முன்னோர்களை முட்டல்களாயும் மூடர்களையும் வர்ணித்து முது நெல்லிக்கனி வார்த்தைகளை தூக்கி எரிகிறோம்.