பறவையாகிறேன்
நான் மெதுவாய்
உருமாறிக் கொண்டிருக்கிறேன்.
என் வீட்டு மரத்தில்
வந்தமரும் நீ
தீங்கற்ற சிறகுகளால்
என்னைக் கோதுகிறாய்.
இதமான குளிர் காற்றில்
உன் காதல் பரவுகிறது.
உன் எளிய பார்வையில்
ஊஞ்சலென ஆடுகிறது
என் நாற்காலி.
அதிர்ந்து வரும் உன் குரலில்...
நீ திரிந்த காட்டின் ஞாபகங்கள்
அலைகின்றன.
மெல்லிய சாரலில்
என் பருவம் வாய் குவிக்கிறது.
சிறகுகளும்...
வானமும் முளைக்க
பறவையாகிறேன் நான்.