பிணங்கள் கடக்கும் தருணம்
இதோ
என் உயிர்
தருகிறேன்!!
என்
அங்கங்களை
அறுத்து
அளிக்கிறேன்
போய் விடு..
நிலாக்கால
இரசனைகளையும்
பிடுங்கி
பரிசளிக்கிறேன்
போய்விடு..
ஏதேன் தோட்டத்து
ஆப்பிள்களை
கூட கொய்து
கொடுக்கிறேன்!!
போய் விடு...
ஆயிரம் மைலுக்கு
அப்பாலிருந்து வந்த
முத்தங்களையும்
மொத்தமாய்
அளிக்கிறேன்
போய் விடு!
முடிந்தால்!
இதுவரை
சேமித்த
புன்னகை!!
அவள் பற்றி
எழுதிய
கவிதைகள்!
அடி நெஞ்சில்
அடைத்த
அவாக்கள்!
அடுத்தவன்
கொடுத்த
ஆனந்தம்!!
என் அம்மாவை
எடுத்துச்செல்ல
வந்திருக்கும்
மரணமே போய்விடு!
இதோ என்
உயிரைக்கூட
உனக்கு
கொடுக்கிறேன்
போய்விடு!!
சவ ஊர்வலம்
கடந்துபோகையில்
எல்லாம்
மகன்களின்
மன்றாட்டமாய்...