காதல் ஒரு கண்ணாமூச்சி

காதல் ஒரு கண்ணாமூச்சி

காதல் என்று எல்லோரும் சொல்ல
கேள்வி பட்டிருக்கிறேன்
ஆனால் உண்மை காதலை
உணர்ந்ததில்லை
பயிலும் காலத்தில் ஒரு மங்கையை கண்டேன்,
அவள் மீது எதிர்பாரா ஒரு உணர்ச்சி எழுந்தது
அதுதான் காதலா என்று அறிய மனம் துடித்தது
முயற்சித்தேன் முயற்சித்தேன்
முடியவில்லை என்னால் அந்த மங்கையை மறப்பதற்கு.
அவளது ஆழ்ந்த நினைப்பில்
அவள் முகம் உடல் அங்கங்கள் கூட,
என் நினைவை விட்டு அழிந்தது .
ஆனால் கசப்பு தன்மை அறியா அந்த கொவ்வை இதழ்கள்
அதனின் புண்சிரிப்புகள் என் நெஞ்சில்
தானாகவே அழியா ஓவியமாய் பதிந்தது,,,
அலைந்தேன் அவளை பின் தொடர்ந்தேன்..
அப்போது கூட எனக்கு புரிய வில்லை இது காதலா என்று ,
மனம் கொதித்தது , இதயம் நான் இல்லை என்றது .,,
காரணம் புரியாமல் மனம் பிதரியது,..
அன்று ஒருநாள் அவள் பிறந்தநாள்
என்னையும் அழைத்து
என் அன்னை மட்டுமே எதுவரை எனக்கு கொடுத்த ஒரு வகை இனிப்பினை கொடுத்தால் ,
அப்போது மனம் சொல்லியது அவள் உனது அன்னை என்று.,
பரிட்சையிலே எனக்கு படிக்க பள்ளியில் உதவியாக இருந்தால்
அப்போது மனம் சொல்லியது அவள் உனது ஆசிரியை என்று..
பருவங்கள் பல ஓடின ,
பள்ளி பிரிவு உபசார விழா வந்தது
எல்லோரும் எல்லோரிடமும் நெருங்கி உரையாடி கொண்டு
பிரியும் வருத்தங்களை தெரிவித்து கொண்டனர்..
ஆனால் நான் அவளை பார்கையில் இன்னும் இந்த உறவு பிரிய வில்லை
தொடரும் என்று மனம் சொல்லியதை உணர்ந்தேன்...
அன்று முதல் நான் பள்ளியை காண வில்லை
அவள் பாத சுவடுகளை கூட காணவில்லை
என்னமோ மனம் அவளை மட்டுமே நினைத்தது..
நினைத்து கொண்டே இருந்தது,
என் கண்களை விட என் இதயம் தான் மிகவும் கண்ணீர் சிந்தியது..
ஆனால் அபோதும் கூட எது காதலா என்று மனம் அறிய வில்லை
ஒரு நாள் ஒரு தகவல் வந்தது ,
திருமண வாழ்த்து மடலில்
என் உடன் படித்த என் ஆருயிர் தோழனுக்கும்
என் மனதுடன் உறவாடிய அந்த பெண்ணுக்கும்
திருமணம்,,
மனம் உருகியது
கண்கள் கலங்கியது
இதயமே ரத்த கண்ணீர் சிந்தியது
இறுதி வரை நான் கொண்டது காதலா என்று தெரியாமலே
நடந்தது இவை அனைத்தும் ..

கடவுளிடம் நன்றி கூறினேன் என் தோழனுக்கு
அந்த கடவுள் எல்லாவட்டிரிலும் சரியான ஒரு பெண்ணை கொடுத்ததற்கு,,.
கடவுளிடம் முறையாடினேன் என்னை போல் வேறு யாரும் இந்த மாதிரி
தன் காதலை தானே அறியாமல் வாழ்வில் ஏமாற்றம் அடைய கூடாது என்று...,,,

-- இவன் காதலிக்க தெரியாதவன்.

எழுதியவர் : முத்துவேல் (5-Aug-15, 8:20 pm)
சேர்த்தது : MUTHUVEL
பார்வை : 85

மேலே