காதல் அவஸ்தை
சொல்லி முடிக்க
வார்த்தை கிடைக்கவில்லை..
சொல்லாமல் இருக்க
உன் சொப்பனமும் விடவில்லை..
காதலின் பரிசு கயிறு தான்..
ஏற்றுக்கொள்கிறேன்
கட்டளை இடு..
தாம்புகயிறா தாலிக்கயிறா மட்டும்
காதோரம்
சொல்லிவிடு..
என் விழி வாசலுக்கு
நீ விருந்து வைக்கும்வரை
உன் வழி எங்கும்
என் காதல் காத்துக்கிடக்கும்..