வரம் வேண்டி

கற்றை கார்குழலில் -என்
ஒற்றை ஓர் உயிரை
கட்டி இழுத்து போறவளே
இல்லை எனும் அந்த
ஒற்றை ஓர் சொல்லில் -எனை
வெட்டி எறிந்துவிட்டு போறவளே ....

கேளாமல் தந்ததனால்
என் இதயத்தை ...........
அற்பமென கொண்டாயோ
அதில் ரத்தமும் சதையுமாய்
உயிரோடு துடிக்கும் என்
காதலை காணாமல் போனாயோ

விடியல்களை என் வாசலுக்கு
வலிந்து இழுத்து வந்தவள் நீதானே
இன்று ஏனோ என் காலைகளுக்கு
கருப்பு வண்ணம் பூசுகிறாய்
காதல் இல்லையென கருணை
இல்லாமல் பேசுகிறாய்

கொலைகள் செய்வது
தேவதையின் இயல்பல்லவே
இருந்தும் எனை கொன்றது ஏன்
கோரமான உன் மௌனத்தால்
தினமும் எனை தின்றது ஏன் ......

பறிதவிக்கும் பசுக்கன்றாய்
கதறிக்கொண்டு உன் பின்னே
ஓடி வரும் என் உயிரை
நின்று ஓர் நிமிடம் பாராயோ
சென்மம் பல வாழ்ந்திருக்க
என் இதயம் கொண்டு உன் இதயம் தாராயோ

கடைசியாய் கேட்கிறேன்
ஒரே ஒரு முறை
கடை பார்வை பார்த்து விடு
அடியேனை கரை சேர்த்து விடு
உயிரோடு நான் வாழ ....
அன்பே உன் காதல் கொடு.....

எழுதியவர் : மேரி டயானா (7-Aug-15, 12:54 pm)
Tanglish : varam venti
பார்வை : 103

மேலே