எண்ணங்களின் துளிகள்
*வானத்தைப் பாருங்கள்
வெண் மேகங்களைக்
மின்னல் கொடிகளால்
கட்டியிருக்கிறார்கள்.*
*மேகங்கள் எரிகிறதா என்ன?
வானத்திற்க்கு வியர்த்துக் கொட்டுகிறதே !!! *
*வானத்தில் நட்சத்திரத்தை பாருங்கள்
பூமியில் வைரங்களின் விலை
ஏறிப் போய்விட்டன*
*வானத்தில் நிலவை பாருங்கள்
பூமியில் தங்கம் விலை
ஏறிப் போய்விட்டன*
*கீழ் வானத்தை காட்டுங்கள்
மனைவி
மஞ்சல் கயிறே
போதும் என்பாள்*
*வானவில்லை பாருங்கள்
கலப்பு திருமணத்தை
கண்டு கொள்ள மாட்டீர்கள்*
*உங்கள் காதலியின்
கண்களை பாருங்கள்
போதைக்கு அடிமையாக
மாட்டீர்கள்*
*குளத்தை எட்டி பாருங்கள்
அது வானத்தை விழுங்கி
இருக்கிறது*
*வானத்தை அன்னாந்து பாருங்கள் --அது
என்னை தொட்டு விடலாம்
என்கிறது*
*நிலவை பாருங்கள்
நீங்கள் கற்பனை செய்வீய்கள்*
*நிலவுக்குள் பாருங்கள்
நிலவே கற்பனை செய்கிறது*
*தூரத்தில் நாய் குரைக்கிறது
காதலில் தோல்வி அடைந்தவன்
எவனோ
சாலையில் நடந்துக் கொண்டிருக்கிறான்*
*அதே நாய் வாலை ஆட்டுகிறது
அவன் ஞானம் அடைந்து விட்டான்*
நட்சத்திரம் காதலிப்பதாக
நம்பி விடாதீர்கள்
அதற்க்கு கண் நோய்,
எப்பொழுதும்
கண்ணடித்துக் கொண்டுதான் இருக்கிறது
*வானத்தை பாருங்கள்
மை நிரம்பியிருக்கிறது*
*மின்னலை பாருங்கள்
தங்க பேனா என்கிறது*
*மேகத்தை பாருங்கள்
கவிஞன் இல்லாமல் தவிக்கிறது*
*என் வீட்டு சோற்று
பானையை கேளுங்கள்--அது
என்னை பூஜ்யம் என்கிறது*