நான்

உன் பாதங்களின் பதிவுகளை
தாங்கிக்கொண்ட படிகளில்
நானும் நின்று
உன்கை பிடித்த கைப்பிடிகள்
சாய்ந்து நின்ற சுவர்கள்
அடுத்தடுத்து அமர்ந்திருந்த
இருக்கைகள்
ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்க்கிறேன்
நிமிடங்களின் இடைவெளிகள்
மணிகளாய் மாறியிருந்தால்
இப்பொழுதும் நீ என்னோடு
உன்வரவால் வீசிப்போன
வசந்தத்தின் ஸ்பரிசங்களை
என் மூச்சுக்காற்றுக்கு முதலீடாக்கி
உன் கண்கள் உலாவிய அத்தனை
இடங்களையும் தழுவுகிறேன்
காற்றில் உறைந்து போன -உன்
பிம்பங்களின் சிதறல்களை
ரசித்துக்கொண்டே நான்...

எழுதியவர் : சார்லி கிருபாகரன் (9-Aug-15, 6:07 pm)
Tanglish : naan
பார்வை : 101

மேலே