ஏனோ தொலைகிறாய்
ஐன்னலோர இருக்கையில் அமர்ந்து
காற்றில் காதல் பரப்புகிறாய்
வளைவுகளின் சரிவுகளிலெல்லாம்
வலது கன்னம் பதிக்கிறாய்
அதிவேக நிறுத்தங்களில்
இடக்கையைப் பற்றிக்கொண்டு
விழிகள் மறைக்கிறாய்
இறக்கங்களில் விழிக்கும்போது மட்டும்
ஏனோ தொலைகிறாய்!