தவணைமுறை
தவணைமுறை புன்னகையின்
வாழ்நாளில் விழும் கன்னக்குழிவுகளை -என்
கண்களால் நிரப்புகிறேன்
நெற்றிப்பரப்பில் தவறிவிழும்
ஒற்றைமுடியை -என்
நாசிக்காற்றால் விலக்க நினைக்கிறேன்
தொலைந்து போன முகவரியை உன்
முதுகில் தடவித்தடவி தேடுகிறேன் -நீ
இதழ்பிரிக்கும் ஓசைகளை -இடது
காதில் வாங்கிக்கொண்டு
இறுக்கி அணைக்கிறேன்.