கவிதை எழுத ஒரு வயசு வேணும்
"ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா"
கண்ணதாசன் கவிதை ஒரு காவியம்
இன்றும் காலத்தால் அழியாத ஓவியம்
மாட்சிமை பொருந்திய நா நயம்
மானிடர் போற்றுதற்கு பா நயம்
கவிதை எழுத ஒரு வயசு வேணும்
கருத்தை சொல்ல ஒரு மனசு வேணும்
எடுத்து சொல்ல ஒரு எளிமை வேணும்
எதையும் சொல்ல ஒரு வயசு வேணும்
கவிதை விதையானால் காதல் முளைக்கலாம்
கருத்து விதையானால் கானம் இசைக்கலாம்
ஞானம் விதையானால் காலம் சிறக்கலாம்
காலம் விதையானால் ஞாலம் உயிர்க்கலாம்
கவிதை எழுத ஒரு மனசு வேணும்
கருத்தை சொல்ல ஒரு வயசு வேணும்!